tamilnadu

img

2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

2024 ஆம் கல்வியாண்டிற்கான 10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தற்போதைய கல்வியாண்டான 2022 - 2023 க்கான பொதுத்தேர்வுகள் மற்றும் மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை இன்று தொடங்கிவிட்டது. மீண்டும் பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 2024 ஆம் கல்வியாண்டிற்கான 10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

  • 2024 மார்ச் 18 இல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன.
  • மார்ச் 19 இல் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 
  • ஏப்ரல் 8 இல் 10  ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.