புதுச்சேரியில் காந்தி பிறந்த நாள் விழா
புதுச்சேரி, அக்.2- மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி,கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல மைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலை வர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராய ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு செயலர், அதிகாரிகள் உள்ளிட்டோர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சர்வ மத பிரார்த்தனை நிகழ்ச்சியும், பாரதி யார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தேசபக்திப் பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சமூக நல்லிணக்க இயக்கம் புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, கொளஞ்சியப்பன், சண்முக சுந்தரம், பிரேமதாசன் மற்றும் பல்வேறு ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
