மரக்காணம் பகுதியில் கியூபா ஆதரவு நிதி வசூல்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கியூபா ஆதரவு நிதி வசூலில் தீவிரமாக ஈடுபட்டனர். முருக்கேரியில் நடைபெற்ற நிதி வசூலுக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.உலகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பினர்கள் ஜெ.ராஜ், எஸ் ராஜி, கே. சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.