tamilnadu

img

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது

சென்னை,பிப்.23- திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அன்று திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை கள்ள ஓட்டு போட்ட தாகக் கூறி தாக்கியதாக  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப் பட்டார்.  மேலும் ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான 2-வது வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஜார்ஜ்டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளி கிருஷ்ணா உத்தரவின்படி பூந்தமல்லி கிளை சிறையில் ஜெயக்குமார்  அடைக்கப்பட்டார். மயி லாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் ஜெயக்குமாரை வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. பூந்தமல்லி கிளைச்சிறையிலுள்ள அவரது ஜாமீன் மனு பிப்ரவரி 23 அன்று விசாரணை நடத்தப்பட்டது. தற்போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் மீது மொத்தம் 12 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்மீதான மற்றொரு வழக்கிலும் மார்ச் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அறிவிக்கப் பட்டுள்ளது.

;