முன்னாள் ஆயுத காவல் படை வீரர்கள் ஆர்ப்பாட்டம்
முன்னாள் வீரர்களின் நலன், மறுவாழ்வு மற்றும் கல்வி–வேலைவாய்ப்புகளில் உரிய இடம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (அக்.2) எழும்பூரில் தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினரின் நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார் உள்ளிட்டோர் பேசினர்.
