tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திமுக விளம்பரங்களுக்குஅனுமதி மறுப்பு
தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.15- திமுகவின் ‘இந்  தியாவை காக்க ஸ்டா  லின் அழைக்கி றேன்’ என்ற தலை மைப்பிலான விளம்  பரங்கள் விதிமுறை களுக்கு எதிராக இருப்பதாக கூறி ஏப்ரல் 4 அன்று தேர்தல் ஆணையம் அனு மதி மறுத்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அமர்வில் திங்களன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்  தல் ஆணையம் சார்பில், ‘புதிய விதி முறைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் தான் வழக்கு தொடர முடியும், உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடி யாது. விளம்பரம் அனுமதி மறுக்கப்பட்  டதை எதிர்த்து விளக்கம் மட்டுமே கேட்க  முடியும். தேர்தல் ஆணையத்தின் உத்த ரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர முடியாது’ என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வழக்கை விசாரித்த நீதி பதிகள், தற்போதைய விதிமுறை முந் தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என்று ஏப்ரல் 17 அன்று விளக்கம்  அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது
சென்னை, ஏப்.15- தமிழ்நாட்டின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில், ஏப்ரல், மே,  ஜூன் மாதங்களை, மீன் உள்ளிட்ட கடல்  வாழ் உயிரிகளின் இனப்பெருக்கம் கால மாக மத்திய மீன்வளத்துறை அமைச்ச கம் கண்டறிந்தது. இதையொட்டி, மீன்  வளத்தைப் பெருக்கும் நோக்கில், ஒவ் வோராண்டும் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை  விதிக்கப்படுவது வழக்கமாக இருந்து  வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட் டில் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்  பிடித் தடைக்காலம் ஏப்ரல் 14 நள்ளிரவு  முதல் அமலுக்கு வந்தது. ஜூன் 14 வரை  61 நாட்களுக்கு இந்தத் தடை அமலில் இருக்கும்.

 

சிபிஎம் தலைவர்களின் இன்றைய பிரச்சாரம்

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்   
மதுரை

ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
மதுரை

உ.வாசுகி
மத்தியக் குழு உறுப்பினர்
அரக்கோணம் (திருத்தணி)

அ.சவுந்தரராசன்
மூத்த தலைவர்
திண்டுக்கல்

வானொலி- தொலைக்காட்சியில்...
சிபிஎம் பிரச்சாரம்

திமுக தலைமையிலான ‘இந்தியா’  கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ. சவுந்த ரராசன், 16.04.2024 செவ்வாயன்று அகில  இந்திய வானொலி யிலும், தூர்தர்ஷன் சென்னை தொலைக்  காட்சியிலும் உரையாற்றுகிறார். இரவு  7.50 மணிக்கும் வானொலியிலும் (கொடைக்கானல் எப்.எம். உட்பட அனைத்துப்  பண்பலைகள்), இரவு 9.00 மணிக்கு தூர்  தர்ஷன் சென்னை தொலைக்காட்சியிலும் அவரது உரையைக் கேட்கலாம்.

அரிபரந்தாமனை மிரட்டுவதா?
பாஜகவினருக்கு கண்டனம்!

சென்னை, ஏப். 15 - சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் ‘தமிழ்நாடு பொது மேடை 2024’ என்ற அமைப்பின் ஒருங்கி ணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அவர் எழுதியுள்ள “நீதித் துறையை நிலை குலையச் செய்யும் பாஜக அரசு” என்ற கட்  டுரை ஒரு இணைய இதழில் வெளியானது டன், சிறு நூலாகவும் வெளிவந்துள்ளது.

இதையடுத்து, காவல் துறைக்கும் என்ஐஏ வுக்கு புகார் செய்து, முன்னாள் நீதிபதி அரி பரந்தாமனை அச்சுறுத்தும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது. இதற்கு கடும் கண்ட னம் தெரிவித்துள்ள முற்போக்கு இயக்கங்  கள், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறி ஞர்கள் “வாக்குப் பதிவு நெருங்கி வரும் நேரத்  தில் அரசியல் களத்தில் கருத்து போராட்டங் கள் நிகழ்வதை தடுப்பது கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் முயற்சி” என தெரி வித்துள்ளனர்.