tamilnadu

img

கொரோனா பாதித்தவர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை மையம்

சென்னை:
கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் ஏற்படும் பின்விளைவுகளுக்கான மறுவாழ்வு மையம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப் பட்டுள்ளது.இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி கூறியதாவது:

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து நோயாளிகளை நன்கு உற்றுநோக்கி கவனித்து வருகிறோம். நோய் சிகிச்சைப் பெற்று வீட்டிற் குச் சென்ற பின்னரும் அவர்களுக்கு ஏதாவது பாதிப்பு உள்ளதா என்பதை கேட்கிறோம்.கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கண் காணித்து வருகிறோம். தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களுக்கு நுரையீரல் பைரோசிஸ் வருகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள பிராண வாயு அளவு குறைந்து 95, 96 என இருக்கிறது. எனவே அவர்களுக்கு மறுவாழ்விற்கான சிகிச்சை அளித் தால் மட்டும் மீண்டும் நோய்த் தொற்று வருவதற்கு முன்னர் இருந்த நிலைக்குச் செல்ல முடியும்.

மறு வாழ்விற்கான சிகிச்சை அளிக்காவிட்டால் வீட்டிலிருந்து முடமாகக் கூடிய நிலை ஏற்படும். பக்கவாதத்திற்கு, உடலில் எலும்புகளில் ஏற்படும் விரிசல் போன்றவற்றிற்கு அதன் பின்னர் அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையால் மட்டுமே பழைய நிலைமைக்குத் திரும்ப முடியும்.அதேபோன்று கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்களுக்கு நுரையீரல் முழுமையாக குணமடைய மறுவாழ்வு பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. முதலில் அவர்களுக்கு மருந்துகளை அளிக்க வேண்டும்.அதைத்தொடர்ந்து மூச்சுப் பயிற்சிக்கான பிரணாயாமம், யோகா போன்ற பயிற்சிகளை அளிக்கும் பொழுது நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவருகின்றனர். இதற்கான சிகிச்சை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப் பட்டுள்ளது.

மன அழுத்த நோய், அதிக உடல் சோர்வு, வரட்டு இருமல் ஆகிய பாதிப்பு உள்ளவர்களுக்கு வெளிநோயாளியாக மருந்து அளித்து சரிசெய்ய முடியும். நோயாளியின் ரத்தத்தில் உள்ள பிராண வாயு அளவின் அடிப்படையில் அவர்களுக்கு மறு வாழ்விற் கான பயிற்சி அளிக்கப்படுகிறது. ரத்தத்தின் உள்ள பிராண வாயுவின் அளவு 95 விழுக்காட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு, ஒரு நடைப்பயிற்சி வைத்து அவர்களுக்கு மூச்சிரைப்பு இல்லை என்றால் மாத்திரைகள் அளித்து அனுப்பிவிடலாம்.ஆனால் நடைப்பயிற்சியின் பொழுது பிராண வாயுவின் அளவு 90 விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்தால் அவர்களை பிரத் யேகமாக கவனித்து சிகிச்சை அளிக்கிறோம். மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு மூச்சு இரைப்பு ஏற்பட்டால், அவர் களைப் படுக்கையில் வைத்து சிகிச்சை அளிக்கிறோம். அதில் அவர்களுக்கு முன்னேற்றம் ஏற் பட்டால் அடுத்த நிலைக்குப் பயிற்சி அளிக்கிறோம். அவர் களின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் மீண்டும் வரவழைத்து அவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்து, அதற்கேற்ப பயிற்சி அளவையும் அதிகரிக்கப்படுகிறது. இதுமட்டுமன்றி நோய்த்தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மாரடைப்பு, கண் பாதிப்பு போன்றவையும் ஏற் படுகிறது. எனவே இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி மேற் கொண்டுவருகிறோம். கோவிட்-19 அறிகுறியுடன் நோயாளிகள் நெகட்டிவ் என வருகின்றனர். எல்லா அறிகுறிகளும் இருந்து நோயாளிகள் தீவிர பாதிப்புடன் வருகின்றனர். எனவே பொதுமக்கள் காய்ச்சல், உடல் வலி, மூச்சிரைப்பு போன்ற எந்த மாதிரி அறிகுறிகள் இருந்தாலும் கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன.எனவே முதலில் கொரோனாவிற்கான சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் பின்னர்தான் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை அடுத்த ஆறு மாதத்திற்கு நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா இறப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதனால் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

;