tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி குடியிருப்புக்கு நடுவில் செயல்பட்டு வந்த கொரோனா நோய் சிகிச்சை மையம் இடமாற்றம்

உதகை, ஆக. 1 - உதகையில் குடியிருப்பு களுக்கு மத்தியில் செயல் பட்டு வந்த தற்காலிகக் கொரோனா சிகிச்சை மையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.  நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற் றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை, தனி யார் பள்ளிகள் மற்றும் விடுதிகளை மாவட்ட நிர்வாகம் தற்காலிக சிகிக்சை மையங்களாக பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், உதகை அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள ஸ்டோன் ஹவுஸ் பகுதியில் உள்ள விடுதியில் நோய்த்தொற்று பாதித்தவர்கள் அனு மதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த னர். இந்நிலையில், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள், இந்த சிகிச்சை மையத் தால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் இதனை மாவட்ட ஆட்சியர் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த னர். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது. இதன்காரணமாக கடந்த சில தினங்க ளுக்கு முன்பு இந்த சிகிச்சை மையம் மூடப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப் பட்டது. இதற்கு இந்தப் பகுதியில் வசிக் கும் பொதுமக்கள்  நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்தினருக்கும்  செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.