tamilnadu

img

பாலின சமத்துவத்திற்காக.........

பாலின சமநிலையை வலியுறுத்தும் விதமாக, சென்னையில் வால்வோ கார் இந்தியா நிறுவனம் பெண்கள் மட்டுமே பங்கேற்ற கார் ஓட்டும் நிகழ்வை நடத்தியது. பாலின சமநிலை என்பது - வாகன வடிவமைப்பில் சில முன்னேற்றங்களைக் கொண்டு வருவதோடு முடிந்துவிடுவதில்லை. அது இந்நிறுவனத்தின் கனவு மற்றும் கலாச்சாரத்தின் ஒரு அம்சம். தற்போது தனது பணியாளர்களின் எண்ணிக்கையில் 23 சதவீதம் அளவு பெண்களைக் கொண்டுள்ள வால்வோ கார் நிறுவனம், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தனது பல்வேறு துறைகளின் தலைமை பொறுப்புகளில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்காவது பெண்களை அமர்த்த வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுவதாக நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் சுதீப் நாராயண் தெரிவித்துள்ளார்.