tamilnadu

மலேசியா, தாய்லாந்துக்கு விமானக்கட்டணம் ரூ 4299

சென்னை,மே 15- குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ள ஏர்ஏஷியா, கோலாலம்பூர் மற்றும் பேங்காங்கிற்கு செல்லும் அனைத்து விமானப்பயணிகளுக்கும் சர்வதேச விமான பயணத்தை குறைந்த கட்டணத்தில் அளிக்கிறது. சென்னையில் இருந்து கோலாலம்பூர் மற்று பேங்காக் செல்லும் அனைத்து பயணிகளுக்கும் கவர்ச்சிகரமான கட்டணத்தில் விமான சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஏர்ஏஷியாவின் விருந்தினர்கள் இப்போது கோலாலம்பூர் மற்றும் பேங்காக் செல்லும் தங்கள் பயணத்தை குறைந்த கட்டணத்தில், வெறும் 4299 ரூபாயில்திட்டமிடலாம்.2019ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி இதற்கானபயணச்சீட்டு விற்பனை ஆரம்பமாகிறது. மேலும் ஏர்ஏஷியா. வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது பயணத்தை2019, மே மாதம் 19ஆம் தேதிக்குள் திட்டமிட வலியுறுத்துகிறது. பயண தேதி 13 மே 2019 முதல் ஆரம்பித்து 31 அக்டோபர்2019-ல் முடிவடைகிறது. மேலும் தாய்லாந்து அரசு, விசா கட்டண சலுகையை 31ஆம் தேதி அக்டோபர் 2019 வரை நீட்டித்துள்ளது. 

;