tamilnadu

img

கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரம் - சிபிஎம் மீண்டும் ஒரு வழக்கு

கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரம் தொடர்பாக சிபிஎம் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஜூலை 18-ஆம் தேதிக்குள் பொது இடங்களில் இருக்கும் கொடிக்கம்பங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இதை தொடர்ந்து இம்மனுவை நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.