tamilnadu

img

புதிய மீன்வள வரைவு மசோதாவை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம்


ராமநாதபுரம், ஜூலைஇ 17-
மீனவர்களின் நலனை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய மீன்வள வரைவு மசோதாவிற்கு எதிராக ராமநாதபுரம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
ஒன்றிய அரசு அறிமுகம் செய்திருக்கும் புதிய மீன்வள வரைவு மசோதாவை பல அம்சங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது மீன்வளத்துறை அதிகாரிகளிடம் டோக்கன் பெற்றுச் செல்லும் மீனவர்கள் , இந்த வரைவு மசோதாவிற்கு பின்னர் , கட்டணம் செலுத்தி டோக்கன் பெறவேண்டும் . மேலும், குறிப்பிட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  குறிப்பிட்ட வலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நிர்பந்திக்கிறது. இதன் மூலம் மறைமுகமாக மீன்பிடி தொழிலை கார்ப்பரேட்களின் கைக்கு மாற்றும் வேலையும் இதற்குள் அடங்கியிருக்கிறது என கூறி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே புதிய மீன்வள வரைவு மசோதாவை திரும்பபெற வேண்டும் என கோரி  கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;