tamilnadu

img

4 லட்சம் பணியிடங்களை நிரப்புக அரசு ஊழியர் சங்க தென்சென்னை மாநாடு வலியுறுத்தல்

சென்னை, செப். 11 - அரசுத்துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 12வது மாநாடு புதனன்று (செப். 11) நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், புதிய ஓய்வூ திய திட்டத்தை கைவிட வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை தர வேண்டும், ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும், தொகுப்பூ திய, மதிப்பூதியத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு காலமுறைஊதியம் வழங்க வேண்டும் என்று வலியு றுத்தப்பட்டது. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீதான குற்ற குறிப்பாணை யை திரும்ப பெற வேண்டும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் மு. சுப்பிரமணியன் மீதான பணியிடை நீக்கம், அரசு ஊழியர் சங்க துணைத் தலைவர் கரூர் மு. சுப்பிர மணியன் மற்றும் 5 செவிலி யர்கள் மீதான தற்காலிக பணி நீக்கம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்களும் நிறைவேற்ற ப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சா. டானியல் ஜெயசிங் தலைமை தாங்கி னர். அஞ்சலி தீர்மானத்தை இணைச் செயலாளர் இரா. வெற்றி செல்வன் வாசித்தார். இணைச் செயலாளர் தெ. வாசுகி வரவேற்றார். மாநில தலைவர் (பொறுப்பு) ஆ. செல்வம் துவக்கவுரையாற்றினார். வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கையை மாவட்டச் செயலாளர் மு. வெங்கடேச னும், வரவு செலவு அறிக்கை யை ப. புகழேந்தியும் சமர்ப்பி த்தனர். வட சென்னை மாவட்டத் தலைவர் ப. சுந்தரம்மாள், சென்னை மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் க. சாந்தகுமார் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் பொதுச் செயலாளர் மு. அன்பரசு நிறைவுரையாற்றினர். இம்மாநாட்டில் நடை பெற்ற மகளிர் கருத்த ரங்கிற்கு மகளிர் துணைக்குழு தலைவர் உ. சுமதி தலைமை தாங்கினார். துணைக்குழு உறுப்பினர் சு.வெண்மதி வரவேற்றார். மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் என்.மணிமாலா, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மகளிர் பிரிவு செயலாளர் ந. அருணா உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் இரா.ந. நம்பிராஜன் நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவராக சா. டானியல் ஜெயசிங், செயலாளராக ஆர்.என். நம்பிராஜன், பொருளாளராக உ. சுமதி ஆகியோர் தேர்ந்தெடுக்க ப்பட்டனர்.

;