கரும்பு விலையை உயர்த்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி, செப். 22- தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மாநாடு திருக்கோவிலூரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். பணம் பூண்டி கோட்டப் பொருளாளர் பி.அமரஜோதி வரவேற்றார். மாநில பொது செயலாளர் டி.ரவீந்திரன், மாநிலத் தலைவர் சு. வேல்மாறன், எஸ்.ஜோதிராமன், கள்ளக்குறிச்சி ஏ.வி.ஸ்டாலின் மணி, விழுப்புரம் டி.ஆர்.முருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில துணைத் தலைவர் டி.ஆர்.குண்டுரெட்டியார், கே 1 ஆலை சங்கத் தலைவர் கதிர்.கோபால், கே1 ஆலைச் சங்க செயலாளர் கே.பலராமன், கே 2 ஆலை சங்கத் தலைவர் ஆர்.குருநாதன், ராஜஸ்ரீ ஆலை சங்க செயலாளர் ஆர்.தாண்ட வராயன், தரணி ஆலை சங்க செயலாளர் ஜி.அருள்தாஸ், முகையூர் கோட்டத் தலைவர் ஏ.கே.டி.ரஜினி, மணம்பூண்டி கோட்டத் தலைவர் பிரசாத், கண்டம்பள்ளம் கோட்டத் தலைவர் பா.பொன்னுசாமி உரையாற்றினர். நிர்வாகிகள் தேர்வு இந்த மாநாட்டில் மணம் பூண்டி கரும்புக் கோட்டம், முகையூர் கரும்புக்கோட்டம், மணலூர்பேட்டை கரும்புக்கோட்டம், அண்ட பள்ளம் கரும்புக்கோட்டம், வெறை யூர் கரும்புக்கோட்டம், வெங்கூர் கரும்புக்கோட்டம் ஆகிய தோட்டங்களை உள்ளடக்கிய ஆலை மட்ட தலைவராக கிரிதாரி.பிரசாத், செயலாளராக பா. பொன்னுசாமி, பொருளாளராக பி.அமரஜோதி தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வெட்டுக் கூலியை கட்டுப்படுத்தி வெட்டுக்கூலியின் 50 சத வீதத்தை சர்க்கரை ஆலைகள் நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். நவீன கரும்பு வெட்டும் இயந்திரத்தின் விலை கோடிக்கணக்கில் இருப்பதால், எளிய விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் புதிய வெட்டி இயந்திரத்தை உரு வாக்கி வழங்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2013-2017 ஆண்டுகளில் தரவேண்டிய எஸ்.ஏ.பி. பாக்கித் தொகை ரூ.1,200 கோடியை தமிழக அரசும் சர்க்கரை ஆலை துறை ஆணையமும் பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டின் நிறைவாக, திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு சங்க பொருளாளர் எம்.பழனி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையில் உள்ள நிலுவைத் தொகையை வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.