tamilnadu

img

அறுவடை செய்து 40 நாட்களுக்கு மேலாகியும்  நெல் கொள்முதல் செய்யப்படவில்லை  விவசாயிகள் வேதனை

அறுவடை செய்து 40 நாட்களுக்கு மேலாகியும்  நெல் கொள்முதல் செய்யப்படவில்லை  விவசாயிகள் வேதனை!

திருவள்ளூர், அக்.24- திருவள்ளூர் அருகே புன்னபாக்கம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கரில் 100-க்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் விவ சாயம் செய்து வருகின்றனர். கடந்த 40 நாட்களுக்கு முன்பு அறுவடை செய்து நெல் காய வைக்கப்பட்ட நிலையில், அதை நெல் கொள்முதல் நிலையத்தில் முறையாக கொள்முதல் செய்யவில்லை. கோணிப் பைகள் இல்லை, சணல் இல்லை என காரணங்கள் சொல்லி 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகளின் மூட்டைகளை எடுக்காமல் அலைகழித்துள்ளனர். தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காய வைக்கப்பட்டிருந்த நெல் முழுவதும் மழையில் நனைந்து முளைத்து நாற்று விடும் அளவிற்கு வந்துள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் சுமார் 10 முதல் 40 மூட்டைகள் வரை மழையில் நனைந்து நெல் முளைத்துள்ளதால், சுமார் 500 மூட்டைகள் வரை வீணாகியுள்ளன. இத னால் விவசாயிகள் பெரும் வேதனையும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலை யிட்டு விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.