ஆக.12 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விழுப்புரம், ஆக.9- விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 12 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு கோட்டாட்சியர் முரு கேசன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் கோரிக்கை களை கேட்டறிந்து மனுக்களை பெறுவார். இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் ஆகிய வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு உட்பட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்து கொள்ளு மாறு மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளித் தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல்: தந்தை கைது
கிருஷ்ணகிரி, ஆக.9- கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள சாலூரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வேடியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வேலாயுதம் (45) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். போச்சம்பள்ளி வட்டம், கதக்களி கொட்டாயைச் சேர்ந்த வேலாயுதத்தின் இரு மகள்கள் இப்பள்ளி யில் கல்வி பயின்று வரு கின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக வேலாயுதமும் அவரது மனைவியும் கடந்த எட்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு வேலாயுதம் பள்ளிக்குச் சென்று தனது மகள்களைப் பார்க்க அனுமதி கேட்டபோது, தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த வேலாயுதம், தலைமை ஆசிரியருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து வேலாயுதத்தைக் கைது செய்தனர்.
விமான நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்!
சென்னை, ஆக.9- மலேசியாவில் இருந்து 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்த நபரை சென்னை விமான நிலைய சுங்கதுறை அதிகாரிகள் கைது செய்தனர். கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சனிக்கிழமையன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் அடைந்து, அவரிடம் அதி காரிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவரது உடைமைகளை பிரித்து சோதனை செய்தபோது அவ ரது பேகில் 6 பார்சல்களில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பயணியிடமிருந்து சுமார் 4 கிலோ உயரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு பல கோடி இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டது.