திருவண்ணாமலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவண்ணாமலை, ஜூலை 14- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 18) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண் துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளைக் கூட்டத்தில் தெரிவித்து தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்
விழுப்புரம், ஜூலை 14- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே கொத்தனூரை சேர்ந்த மோகன்ராஜ் (22) சரவணப்பாக்கம் உதயா (25) ஆகிய இருவரும் கடந்த ஆண்டு தடுத்தார் கொண்டூர் ஏரியில் ராஜதுரை என்பவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வானூர் கல்குவாரியில் வீசிய வழக்கு தொடர்பாக சாட்சியாக இருந்த செல்வ குமாரை கடந்த மாதம் 16 ஆம் தேதி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, மோகன் ராஜ் மற்றும் உதயா ஆகிய இருவரும் கைது செய்யப் பட்டு நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றனர். இவர்களின் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவின் பேரில் மோகன்ராஜ் மற்றும் உதயா ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
போதைப் பொருள் பதுக்கல்
சென்னை,ஜூலை 14- மதுரவாயல், காமாட்சி நகர் 2வது மெயின் ரோட்டில் காவல்துறையினர் கண் காணித்து, அங்கு சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் வைத்திருந்த வசந்த்(23), கார்த்திக் (27), ஆகாஷ் (24),கௌதம் (28), ராஜ்குமார் (27), தினேஷ் குமார் (24), பவேஷ் (21), திவாகர் (27), ரூபன் (26), அருண் பரிஷித் (27) ஆகிய 10 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமி ருந்து எம்டிஎம்ஏ மாத்திரை கள், ஓஜி கஞ்சா மற்றும் ரூ.50 ஆயிரம் மற்றும் ராயல் என்பீல்டு புல்லட் இருசக்கர வாகனம் பறி முதல் செய்யப்பட்டது. விசா ரணையில் கார்த்திக் மற்றும் ஆகாஷ் மீது ஏற்கெனவே ஒரு போதைப் பொருள் வழக்கு உள்ளது தெரியவந்தது.
குடிநீர் பாட்டிலில் பல்லி- பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர்,ஜூலை 14- புழல் பகுதியைச் சேர்ந்த வர் பாபு. இவரது மனைவி சங்கீதா சென்னை மாந கராட்சில் 31-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர்கள் குடும்பத்து டன் பொன்னேரி அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற னர். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை யில் மொத்தமாக குடிநீர் பாட்டில்களை வாங்கி சென் றனர். உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க ஒரு குடிநீர் பாட்டிலை எடுத்த போது அதில் இறந்த நிலை யில் பல்லி ஒன்று கிடந்தது. இது குறித்து சம்பந்தப் பட்ட தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை ஊழி யர்களிடம் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஏராளமானோர் குடிநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தி னர்.
தமிழகத்தில் ஜூலை 20 வரை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜூலை 14 - தமிழகத்தில் ஜூலை 15 முதல் 20 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் திருக்கிறது. இதுகுறித்த வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்குவங்க பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நில வுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜூலை 15 அன்று ஓரிரு இடங்களில், ஜூலை 16 முதல் 20 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித் துள்ளது. மேலும், தமிழகத்தில் ஜூலை 15 அன்று நீலகிரி மாவட்டத்தில், ஜூலை 16 அன்று கோவை மாவட்டத்தில் மலைப் பகுதிகள், நீலகிரி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளது. ஜூலை 17 அன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை, கோவை மாவட்டத்தில் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சி புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய கூடும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஜூலை 18 அன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதி களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணா மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 19, 20 தேதிகளில் நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு கசிவு; தாயும், மகளும் உயிரிழப்பு
காஞ்சிபுரம், ஜூலை 14- காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட கர்ப்பிணிப் பெண்ணும், அவரது மகளும் திங்களன்று (ஜூலை 14) உயிரிழந்தனர். காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(34) நெசவாளரான இவரது மனைவி மணிமேகலை(29) கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் மகள் கிருபா ஷினியுடன்(8) தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் லிங்கப் பாளையம் தெருவில் உள்ள மணிமேகலை யின் தந்தை வீட்டில் தாயும், மகளும் குளித்துக் கொண்டிருந்த போது வீட்டி லிருந்த சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக வெளியில் சென்று தப்பித்து விட்டனர். குளியலறையில் இருந்தவர்கள் விபரம் தெரியாமல் தீ விபத்தில் சிக்கிக் கொண்ட னர். தாயையும், மகளையும் பலத்த தீக்காயங்களுடன் அருகில் இருந்த வர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை யில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். சமையல் எரிவாயு உருளைக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும், அவரது மகளும் உயிரிழந்தது தொடர்பாக சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.