“பாடலுக்கு இசையா, மொழியா?’ என்று பார்த்தால் இசை இல்லாமல் பாடல் இல்லை. பாடல் இல்லாமல் இசை இல்லை. அப்படி பிரிக்க முடியாத இரண்டை வச்சுக்கிட்டு எதற்காக இப்படி பேசிக்கிட்டு இருக்காங்கன்னா, அது தனிப்பட்ட மோதல். இரண்டு ஆளுமையின் உரசல்கள். அதில் நமக்கு பெரியதாக உடன்பாடு கிடையாது. பாடலைக் கொண்டாடுகிற ரசிகர்களுக்கு இசையா, மொழியா என்று எப்படி பாகுபாடு இருக்கும்?” என திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டுள்ளார்.