tamilnadu

img

நேரடியாக விண்ணப்பிக்கும் முறையை ஏற்படுத்துக! அமைப்புசாரா தொழிலாளர் மாநாடு கோரிக்கை

நேரடியாக விண்ணப்பிக்கும் முறையை ஏற்படுத்துக! அமைப்புசாரா தொழிலாளர் மாநாடு கோரிக்கை

சென்னை, ஆக. 25 - நலவாரிய அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையை ஏற்படுத்த வேண்டும் என்று பெருநகர சென்னை அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் 3வது மாநாடு சனிக்கிழமை யன்று (ஆக.23) அயனாவரத்தில் நடை பெற்றது. மாநாட்டில், பெண் தொழிலாளர்க ளுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், பள்ளி கல்வி உதவி நிதி ரூ.5 ஆயிரமாகவும், உயர்கல்வி நிதியை ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்த வேண்டும், உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்திற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும், வருவாய்த்துறை ஆய்வாளர் விசாரணையை ரத்து செய்ய வேண்டும், இயற்கை மரண நிதி கோரி விண்ணப்பித்த 3 மாதத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சி.திருவேட்டை தலைமை தாங்கினர். துணைத் தலைவர் ஏ.எல்.மனோகரன் வர வேற்றார். அஞ்சலி தீர்மானத்தை துணைச் செயலாளர் கே.வெங்கடேசன் வசித்தார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.அருள்குமார் மாநாட்டை துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை மாவட்டச் செய லாளர் வி.செந்தில்குமாரும், வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் கே.சுகுமாரும் சமர்ப்பித்தனர். கட்டுமான சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி.மார்டின் வாழ்த்தி பேசினார். துணைத் தலைவர் எஸ்.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். 15 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் தலைவராக பி.சீனிவாசன், பொதுச்செய லாளராக அ.இரணியன், பொருளாளராக கே.சுகுமார் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.