மக்களை வதைக்கும் சுற்றுச்சூழல் மாசு!
கும்மிடிப்பூண்டியில் ஊரை விட்டு காலி செய்யும் அப்பாவி குடும்பங்கள்
திருவள்ளூர், ஆக.27- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளா கத்தில் நுழைந்தாலே புகை மண்ட லத்திற்குள் பிரவேசிக்க வேண்டி வரும். அங்குள்ள சித்தரா ஜகண்டிகை ஊராட்சியில் பாம்பன்குப்பம், கோபால்ரெட்டி கண்டிகை உள்ளது. இதில் சித்தராஜகண்டிகையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றிலும் தனியாருக்கு சொந்தமான ஐடெக் கார்பன், காமாட்சி இரும்பு உருக்கு தொழிற்சாலைகள், கனிஷ்கா, ஒபிஜி போன்ற ஆலைகள் செயல்பட்டு வரு கிறது. சுற்றுச்சூழலை அதிகள வில் மாசு ஏற்படுத்தும் என்ப தால் மேற்கண்ட இந்த தொழிற்சாலைகளை ஆரம்பத்தி லிருந்தே பொது மக்கள் எதிர்த்து வந்தனர். அரசும், அதிகாரிகளும் அலட்சியமாக இருந்ததால் இன்று மாணவர்கள் பள்ளி வகுப்பறையிலேயே மயங்கி விழும் அளவிற்கு சுகாதாரம் சீர்கேட்டுள்ளது. சித்திராகண்டிகையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் செவ்வாயன்று (ஆக.26) மதிய உணவிற்கு பிறகு சித்தராஜ கண்டிகையை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் காயத்திரி, தாரகேஸ்வரி, பாம்பன்குப்பம் ஸ்ருதி, யுவஸ்ரீ ஆகியோர் திடிரென வகுப்பறை யிலேயே மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். உடனடி யாக கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிக பாதிப்பு ஏற்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாணவர்கள் மத்தி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ முகாம் சித்தராஜகண்டிகை, பாம்பன் குப்பம், காயலார்மேடு, நாகராஜ் கண்டிகை, புது கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரத்தில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தனியார் தொழிற்சாலைகள் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி நச்சு வாயுக்களை வெளியேற்றி வருகிறது. இதில் வரும் கரித்துகள்கள், கரும்புகை, மாசு காற்றில் கலந்து அந்த பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. இதனால் கிட்னியில் கல், ஆஸ்துமா, புற்று நோய், சரும நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாக கூறப்படு கிறது. இந்த நோய்களுக்கு ஏற்ப மருத்துவ முகாம்களை அரசு நடத்த வேண்டும். வெளியேறும் மக்கள் கும்மிடிப்பூண்டி பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் மாசு பட்டதில், சுவாசிக்கும் காற்று நஞ்சாக மாறி உள்ளதால், இதனை சுவாசிக்கும் ஆடு, மாடுகளும் பாதிக்கிறது. மனித இனமே வாழ தகுதியற்ற பகுதியாக உள்ளது என அரசே அறிவித்துள்ளது. இதனால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என அனைவரும் பல்வேறு மர்ம நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்த விவசாய நிலங்களை எல்லாம், சிப்காட் தொழிற்சாலைகளுக்கு கொடுத்து விட்டு மக்கள் தவிக்கின்றனர். சித்தராஜகண்டிகை, பாம்பன் குப்பம், கோபால்ரெட்டி கண்டிகை ஆகிய கிராமங்களில் அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசு பட்டுள்ளது. இதனை சமாளிக்க முடியாமல் வசதி படைத்தவர்கள் ஊரை விட்டே வெளியேறுகின்றனர். தற்போது வேறு வழியின்றி சாதாரண ஏழை, எளிய மக்க ளும், தொழிற்சாலைகளில் பணிப்புரியும் தொழிலாளர்களும் தான் அங்கு உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகளை சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு இதில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளை சிபிஎம் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் டி.கோபால கிருஷ்ணன், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.சஞ்சய்குமார் ஆகியோர் புதனன்று (ஆக 27), நேரில் சென்று விசாரணை செய்தனர். அப்போது மாணவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுவது அடிக்கடி நிகழ்வதாக மாணவர்கள் கூறுகின்றனர். மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயலி ழந்து கிடப்பதால், இதனை தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் அம்மக்களை சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து பாதுகாக்க புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.