tamilnadu

img

தமிழக சுகாதார துறையில் வேலைவாய்ப்பு

தமிழக சுகாதார துறையில் கிராமப்புற சுகாதார செவிலியர் மற்றும் ஏஎன்எம் பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன் விவரம்:

பணி: VILLAGE HEALTH NURSE /AUXILIARY NURSE MIDWIFE

காலியிடங்கள்: 39

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டாண்டு ஏஎன்எம் படிப்பு முடித்திருக்க வேண்டும். 2012க்கு முன் எனில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத ஏஎன்எம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி, 18 முதல் 59க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வெயிட்டேஜ் மதிப்பெண்கள் விவரம் : பத்தாம் வகுப்புக்கு முடித்தவர்களுக்கு 20 சதவிகிதம், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு 30 சதவிகிதம், ஏ.என்.எம் முடித்தவர்களுக்கு 50 சதவிகிதம் என வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கும் முறை : www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 09.02.2022

மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2022/VHN_DAP_200122.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.