tamilnadu

img

கொரோனா நோயாளிக்கு எக்மோ சிகிச்சை அளித்து குணப்படுத்தினர்

சென்னை:
கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய 58 வயது நோயாளிக்கு நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதால் அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இம்மருத்துவமனையின் டாக்டர்கள் எக்மோ சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றி உள்ளனர். இந்த எக்மோ (எக்ஸ்ட்ரா கோர்போரல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேற்றம்) சிகிச்சையானது கோவிட்டுக்கு பிந்தைய சுவாச செயலிழப்புக்கு தமிழகத்தில் முதல் முறையாக செய்யப்பட்ட சிகிச்சையாகும். டாக்டர் கோவினி பாலசுப்பிரமணியன், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதன், டாக்டர் ராஜவேல், டாக்டர் சிவசைலம் மற்றும் டாக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் குழு இந்த நோயாளிக்கு சிறந்த சிகிச்சை அளித்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது.

இது குறித்து இம்மருத்துவமனையின்  டாக்டர் கோவினி கூறுகையில்,  வழக்கமான நடைமுறைகளை பின்பற்றியபோதிலும் நோயாளிக்கு தொடர்ந்து குறைந்த ஆக்ஸிஜன் அளவு இருந்ததால், அவர் உயிர் பிழைக்க எக்மோ சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு முடிவு செய்தது. நோயாளி 16 நாட்கள் எக்மோ ஆதரவுடன் இருந்தார். அவரது ஆக்ஸிஜன் அளவுகள் படிப்படியாக முன்னேற்றம் கண்டது. 18வது நாளில் அவரது நுரையீரலின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. 20வது நாளில் அவர் குணமடைந்த நிலையில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டர் அகற்றப்பட்டது என்றார்.

;