சென்னை, டிச. 5- சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் 400 ரூபாய்க்கு விற்பனை செய்ய ப்பட்டது. வரத்து குறைந்து வருவ தால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாழக்கிழமை (டிச.5) ஒரு முருங்கைக்காய் விலை ரூ.50 ரூபாய் முதல் 55 க்கு செய்யப்பட்டது.
சில்லரை விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக 250 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ முருங்கைக்காய் வியாழ னன்று 400 ரூபாய்க்கு விற்பனையானது மக்களி டையே அதிர்ச்சியை ஏற்படு த்தியுள்ளது.