அவிநாசி, ஜூன் 24- தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடும் நிலையில், மக்கள் தாகத்தில் தவிக்குக்கொண்டிருக் கும்போது அமைச்சர்கள் யாகமும், யோகாவும் செய்து கொண்டிருப்பதாக அவிநாசியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சாடினர். அவிநாசியை அடுத்த திருமுருகன் பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட கட்டிட மான ஜீவா படிப்பகம் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இப்பொதுக்கூட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னரும், முன்னாள் சட்டமன்ற உறுப் பினருமான கே.தங்கவேல் பங்கேற்று பேசுகையில், மத்தியில் பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அவர்களால் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் கொள் கைகளை கடைபிடிக்கும் இந்த ஆட்சியாளர்கள் ரயில்வே உள் ளிட்ட அனைத்து பொதுத்துறை களை தனியார் மயமாக்குவது, தாரை வார்ப்பது போன்ற கொள்கையை கடைபிடித்து வருகின்றார்கள். இதேபோல், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு மழை வேண்டி யாகம் நடத்துகிறது. தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண குளம், குட்டைகளை தூர்வார வேண்டும், நீராதாரங்களை பாதுகாப்பது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பது, மழை நீர் வேண்டுமென்றால் இயற்கை வளங்களை அதிகரிப்பது, மரம் நடு வது, காடுகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற அறிவியல் ரீதி யான சிந்தனைகளை புகுத்த வேண் டும். ஆனால், இதையெல்லாம் விட்டு விட்டு யாகம் நடத்தும் நிலை நீடித் தால் வருகின்ற ஆண்டுகளில் தமிழ கம் வறட்சி மாநிலமாகவே மாறும். ஆகவே, இத்தகைய மோசமான ஆட்சி களுக்கு எதிராக இடதுசாரிக் கட்சி கள், ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு போராட வேண்டும். இவ் வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து சிபிஎம் மாநில குழு உறுப்பினர் கே. காமராஜ் பேசு கையில், எல்என்டி நிறுவனம் மூலம் திருப்பூர் மக்களுக்கு குடிநீர் விநியோ கம் செய்ய முடிவு செய்தனர். இது தவறு என்று அன்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியது. மேலும், குடிதண்ணீரை அரசே விநி யோகம் செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தியது. இந்நிலையில் தற்போது கோவையில் பிரான்ஸ் நாட்டின் சூயஸ் கம்பெனி மூலம் கோவை மாநகரத்தில் உள்ள 60 வார்டுகளி லும் தண்ணீர் விநியோகம் செய்கின்ற பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த 60 வார்டுகளிலும் இனி எப் போதும் பொதுக்குழாய் என்பது இருக்காது. சூயஸ் கம்பெனி தண்ணீ ருக்கு என்ன விலை தீர்மானிக்கின் றதே அதை கொடுத்துதான் மக்கள் வாங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்திலேயே மிகப்பெரிய பிரச்சனையான விளை நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணி தற்போது தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கெதிராக திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட் டங்களில் விவசாயிகள் போராட் டம் நடத்தி வருகின்றனர். ஆயிரக் கணக்கான விவசாயிகளின் நிலத்தை பறித்துக் கொண்டால் விவசாயிகள் எப்படி உற்பத்தி செய்ய முடியும். இதே போல், தஞ்சை டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தனி யாருக்கு கொடுத்து விட்டார்கள். தமிழகத்திற்கு வாழ்வளிக்க கூடிய தஞ்சை பூமி பாழ்படக் கூடிய நிலைமை உருவாகிவிடும். இத்தகைய ஆட்சி யாளர்களின் மக்களை பாதிக்கக் கூடிய கொள்கைகளை எதிர்த்து அனைத்து மக்களும் ஒன்றுகூடி போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சிபிஎம் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி பேசுகையில், நீலகிரி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு என 5 நாடாளுமன்ற உறுப் பினர்களை உருவாக்கும் அதிகாரம் படைத்தவர்களாக திருப்பூர் மாவட்ட மக்கள் இருக்கின்றீர்கள். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி அடைந்திருப் பதானது சிறுபான்மை மக்கள், உழைப்பாளி மக்கள், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு பெரும் ஆபத்தாக பார்க்கக்கூடியதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கருதுகிறது. இதனை உறுதிசெய்யும் வகையில் முதல் நாடாளுமன்ற கூட்ட தொடரிலேயே முத்தலாக் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இச்சட்டத்தின் மூலம் மனைவியை பிரிந்து செல்லும் முஸ்லிம் ஆண்களுக்கு சிறை தண்டனை கொடுக்கும் நிலை உண் டாகியுள்ளது. இதேபோல், ஆட்சிக்கு வந்த உடனேயே புதிய கல்விக் கொள்கையை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இனி அரசு பொதுத்தேர்வு எழுத வேண்டும். இத்தகைய புதிய கல்விக் கொள்கை என்பது இந்திய நாடு முழுவதற்கும் பேராபத்தாகும். அதேநேரம், தமிழக எம்பிக்கள் பதவியேற்ற நாளன்றே ஆர்எஸ்எஸ், பிஜேபிக்கு எதிரான வலுவான சித்தாந்தம் குரல் நாடா ளுமன்றத்தில் ஒலித்தது. ஒரே ஒரு எம்பியை தவிர்த்து. இதன் எதிரொலி யாக நாடாளுமன்றத்தில் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை சபாநாயகர் தடை செய்துவிட்டார். இதற்குக் காரணமாக இருந்தவர்கள் தமிழக எம்பிக்கள்.
மேலும், 2014 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா இருந்தபோது 44 சதவிகிதமாக இருந்த அதிமுக வாக்கு சதவிகிதம், தற்போது வெறும் 18 சத விகிதமாக குறைந்துள்ளது. இதற்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான். இதேபோல், தமிழக மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அதுவும், திருப்பூ ரில் விநியோகிக்கும் குடிதண்ணீரை 3 நாட்கள் வைத்து குடித்தால் ஆசிட் போல மாறிவிடும். அந்தளவிற்கு மிக மாசடைந்து விநியோகிக்கப் படுகிறது. இதுபோலவே தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் குடி தண்ணீர் கிடைப்பதற்கு முப்பது நாள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அதையொல்லாம் மறந்து அமைச்சர்கள் யோகா செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கே.பாலபாரதி ஆட்சியாளர்களை சாடினார்.
முன்னதாக, இந்த பொதுக்கூட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர். பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் செ.முத்துக்கண்ணன், அவி நாசி ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப் பினர்கள் பி.முத்துசாமி, ஏ.ஈஸ்வர மூர்த்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பி.ராமசாமி, திமுக பூண்டி நகரச் செயலாளர் எஸ் பாரதி, காங்கி ரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.எஸ்.தட்சிணாமூர்த்தி, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் பூண்டி பகுதி நிர்வாகி சென்னியப்பன் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கட்சிகளின் நிர்வாகி கள் உரையாற்றினர். இந்த பொதுக் கூட்டத்தில் திரளானோர் பங்கேற்ற னர்.