ட்ரீம் ரன்னர்ஸ்' மாரத்தான் போட்டி சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது. நிறுவனங்களுக்கு சமூக பொறுப்பு இருக்கவேண்டும் என்ற வகையில் கேவ்ஸ் நிறுவனம் நடத்திய இந்தப் போட்டியில், 21.1 கி.மீ ஓட்டத்திலும் 10 கி.மீ. ஓட்டத்திலும் இளைஞர்கள்,முதியோர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். உடல் ஊனமுற்றோருக்கு செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்திற்காக இந்த ஓட்டம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இறுதியில் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால்களை கேவ்ஸ் நிறுவனத் தலைவர் சுமித் கங்குலி வழங்கினார்.