மருத்துவர்கள் கவுரவிப்பு
சென்னை, ஜூலை 4- தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி மாவட்ட கிளையின் சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியவர்கள் கவுரவிக்கப் பட்டனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் விலைமதிப்பற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டினார். புகழ்பெற்ற மருத்துவர்களான எச். வி. ஹண்டே, பிரதாப் சி. ரெட்டி பேராசிரியர் முகமது ரேலா, தேவி பிரசாத் ஷெட்டி, சி. பழனிவேலு மயில்வாகனன் நடராஜன், வல்லாளார்புரம் சென்னிமலை நடராஜன்,கே.ஆர். பாலகிருஷ்ணன் ஆகி யோருக்கு விருதுகளை வழங்கினார். சென்னை மருத்துவக் கல்லூரி,ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் சிறந்த சேவைக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகி ஆர்.டி.என். வினோத் சரோகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரோட்டேரி சங்க நிர்வாகிகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.