tamilnadu

img

தகுதியில்லாத ஆளுநர்கள் நடத்தும் தரம் தாழ்ந்த அரசியலை முறியடிப்போம்!

சென்னை, ஜன. 18 - ஆளுநர் மூலம் போட்டி அரசாங்கம் நடத்தும் ஒன்றிய பாஜக அரசின் முயற்சி யை முறியடிப்போம் என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலை வரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சேலத்தில் நடைபெறவிருக்கும் இளைஞரணி மாநாட்டையொட்டி மு.க.  ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள் ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டிரு ப்பதாவது: பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஒன்றியம் வலிமையாக இருக்க வேண்டு மென்றால், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே மாநில சுயாட்சிக் கொள்கையின்  நோக்கம். அதுநிறைவேற்றப்பட்டால் தான், உண்மையான கூட்டாட்சிக் கருத்தியலின்படி இந்திய ஒன்றியம் வலிமையுடன் செயல்பட முடியும்.

ஆனால், பத்தாண்டுகால ஒன்றிய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமை கள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமை களை ஒன்றிய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதி ரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும்.

ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப் பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதி யில்லாதவர்களாக, மலிவான - தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் அவ லத்தை இந்தியா இப்போதுதான் காண் கிறது. ஆன்மீக உணர்வுகளை அரசிய லாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி - சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திரு வள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை ஒன்றிய ஆட்சி யாளர்களே முன்னின்று செய்கின்றனர். இந்த மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலி மை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. இவ்வாறு மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.