tamilnadu

img

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவேன் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வாக்குறுதி

சென்னை, ஏப். 11- ராயபுரம் தொகுதிக் குட்பட்ட ஸ்டான்லி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவ மனைகளையும் மேம்படுத்து வேன் என்று வடசென்னை மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்  கலாநிதி வீரா சாமி தெரிவித்தார்.

ராயபுரம் தொகுதியில் வியாழக்கிழமை (ஏப்.11)  வீடு வீடாகச் சென்று அவர்  வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொது மக்களும் கூட்டணி கட்சியின ரும், பூக்களை தூவியும் ஆரத்தி எடுத்தும் அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசு கையில், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் வடசென்னையின் வளர்ச்சிக்கு குறைவான நிதி  ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள திமுக அரசு  4,000 கோடி ரூபாய் ஒதுக்கி யுள்ளது.

சட்டமன்ற உறுப்பி னர் நிதி, மாமன்ற உறுப்பி னர் நிதி, நாடாளுமன்ற உறுப்பினர் நிதி மூலம் இந்த பகுதியில் பல்வேறு  திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளது. மேலும் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ராயபுரம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் சமூக நிதி என மொத்தம் ரூ.11 கோடியே 38 லட்சம் மதிப்பிலான பணிகளை செய்து கொடுத்துள்ளேன். என்னை நீங்கள் மீண்டும் தேர்தெடுத்தால், மென் மேலும் இதுபோன்ற பணிகளை தொடருவேன்.

அரசு நலத்திட்டங்கள் அனை வருக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுப்பேன். அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவேன் என்றார்.  மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு  வந்து மக்களின் உரிமை களை பறிப்பார். சிஏஏ சட்டத்தை கொண்டு வந்து  சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவார்.  ஒற்றுமை யாக வாழும் மக்களை பிளவுப்படுத்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட  முயற்சிப்பார்கள். இது  தேசத்தை பாதுகாப் பதற்கான தேர்தல். எனவே மக்கள் விரோத, தேச விரோத பாஜகவை, அதற்கு  துணை போன அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி களை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று அவர் என்று  கேட்டுக்கொண்டார்.

இதில் சட்டமன்ற உறுப் பினர்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, பகுதிச்  செயலாளர்கள் வ.பெ.சுரேஷ், இரா.செந்தில் குமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர் ராஜன், செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந் திரன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் டி.வெங்கட், பி.செல்வம், எம்.அண்ணாமலை, எம்.எஸ்.ஜுகைப், ஜி.முனு சாமி, கே‌.செல்வானந்தம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம்,  த.கு.வெங்கடேஷ் வேம்புலி (சிபிஐ), சு.ஜீவன் (மதிமுக) உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.