tamilnadu

img

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 22-ம் தேதி தொடங்குகிறார். இதையொட்டி, ’திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதனன்று நண்பகல் 12 மணிக்கு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் திமுக மாவட்டச் செயலாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவுரைகளை வழங்குவார் எனத் தெரிகிறது.