உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம், ஜூலை 14- மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசின் பங்காக வெறும் ரூ.300 மட்டுமே வழங்கப்படுவதை, சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழு உதவித் தொகையை உயர்த்தி வழங்க பரிந்து ரைக்கும் இதுவரை உயர்த்தாமல் உள்ளது உடனடியாக உதவித்தொகையை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி. விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திங்களன்று (ஜூலை 14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வி.ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பி.முருகன், செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜி.ஜெயக்குமார், துணைச் செயலாளர் எம்.முத்துவேல், துணைத் தலைவர் பி.அய்யனார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கோலியனூர் எம்.மும்மூர்த்தி, ஏ.மணிகண்டன், திருவெண்ணைநல்லூர் கஜலட்சுமி, கண்டாச்சிபுரம் எம்.முருகன், வானூர் ஆர்.காளிதாஸ், விக்கிரவாண்டி ரங்கா பாபு, செஞ்சி முனுசாமி, மேல்மலை யனூர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.