tamilnadu

img

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சென்னை, மார்ச் 14-

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைவு திரைப்பட உலகத்திற்கு பேரிழப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல்செய்தியில் கூறியிருப்பதாவது:

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்(61) கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு  ஏற்பபட்டதின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படடு, தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்ற மறைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் இயக்கிய இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் தடம் பதித்தவை. அவர் இடதுசாரி சிந்தனையாளர். வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திரைபடங்கள் வெளிவந்துகெண்டிருந்த நேரத்தில், முற்போக்கு கருத்துக்களை கொண்ட திரைபடங்களை இயக்கி அக்கருத்துக்களை மக்கள் மனதில் பதியவைத்தவர். அவரது படைப்புகள் அனைத்துமே சமூக மாற்றம் குறித்து பேசுபவை. அவர் எளிமையானவர் மட்டுமல்ல மிகவும் மென்மையானவரும் கூட.  செங்கொடியை திரையில் காட்டவே சினிமாவுக்கு வந்தேன் என்று தைரியமாக முழங்கியவர். அவரது இழப்பு திரைப்பட உலகத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும்  திரைப்பட நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;