tamilnadu

img

வந்தவாசியில் பஞ்சமி நிலங்களை மீட்க அக்.22ல் நேரடி நடவடிக்கை

வந்தவாசியில் பஞ்சமி நிலங்களை  மீட்க அக்.22ல் நேரடி நடவடிக்கை

திருவண்ணாமலை,அக்.3- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே அருங்குணம் கிரா மத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்கும் இயக்கம் கடந்த ஆண்டு, பி.சீனிவாசராவ் நினைவு தினமான அக்.30 அன்று நடைபெற்றது. சிபிஎம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடை பெற்ற அந்த இயக்கத்தின் ஒருபகுதியாக 7 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டது. மேலும், 4.10. 2024 அன்று வந்தவாசி வட்டாட்சியரால் முதற்கட்டமாக மீதமுள்ள பயனாளிகளிடம் நேரடி விசாரணை நடத்தப்பட்டது. அதன் எழுத்துபூர்வமான அறிக்கை செய்யாறு வருவாய் கோட்டாட்சிய ருக்கும், மாவட்ட ஆட்சிய ருக்கும் அனுப்ப உள்ளதாக வந்தவாசி வட்டாட்சியர் தெரிவித்திருந்தார். ஆனால் இதுநாள் வரையில் மேற்படி விசா ரணை முடிவு அறிக்கையை சம்பந்தப்பட்ட பட்டியலின பயனாளிகளுக்கோ, அந்த இயக்கம் நடத்திய அமைப்புகளுக்கோ அளிக்கவில்லை. உடனடியாக பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டு பயனாளிகளிடம் ஒப்ப டைக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அக். 22 அன்று நேரடியாக பஞ்சமி நிலங்களை மீட்டு, பட்டியலின பழங்குடி மக்களிடம் ஒப்படைக்கப் படும் என வந்தவாசி வட்டாட்சியர் சம்பத்குமாரி டம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செய லாளர் அப்துல்காதர், மாவட்டக்குழு உறுப்பினர் யாசர் அராபத், இடைக்குழு உறுப்பினர் சுகுமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.