தோண்டப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்
ஆட்டோ ஓட்டுநர் சங்க மாநாடு வலியுறுத்தல்
வேலூர், ஆக.25 - வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க 8ஆவது மாநாடு வேலூரில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பி.நந்தகுமார் தலைமை தாங்க, சங்க கொடியை மூத்த உறுப்பினர் கே கனகராஜ் ஏற்றி வைத்தார். மாவட்ட துணை தலைவர் எஸ்.காமராஜ் வரவேற்க, மாவட்ட துணை செயலாளர் எஸ்.முருகன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி மாநாட்டில் துவக்க உரை யாற்றினார். மாவட்ட செயலாளர் டி.முரளி வேலை அறிக்கையையும், பொருளாளர் எம்.ராமு நிதிநிலை அறிக்கையையும் சமர்பித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் எம்.காசி, வேலூர் மாவட்ட பீடித் தொழி லாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் வி.நாகேந்திரன், ஆட்டோ தொழிலாளர் சங்க ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மணி தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன துணைப் பொதுச் செயலாளர் எம்.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநகர பொறுப்பாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு மாவட்ட தலைவராக எம்.ராமு, செய லாளராக டி.முரளி, பொருளாளராக எம்.ஆறுமுகம் உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வாகிகள், 35பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானம் ஆன்லைன் அபராதம் விதிப்பதை உடனடியாக தடை செய்ய வேண்டும், வேலூர் மாநகரம் சிஎம்சி மருத்துவமனை சாலை மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களை அராஜகமான முறையில் அகற்றுவதை கைவிட வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலவாரியம் சார்பில் வீட்டுமனை, பட்டா மற்றும் வீடு கட்ட நிதியுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.