தீயணைப்பு ஆணைய தலைவராக டிஜிபி சங்கர் ஜிவாலை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், இன்று மாலை அவருக்கு பிரிவு உபச்சார நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த சூழலில், அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. டிஜிபி சங்கர் ஜிவாலை தீயணைப்பு ஆணைய தலைவராக நியமித்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீராஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதையொட்டியும், தீ ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதையொட்டியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.