tamilnadu

பேரவையில் நடந்தது என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை,பிப்.12- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடை பெற்ற நிகழ்வுகள் குறித்து ஆளுநர்  மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில்  உண்மைக்கு புறம்பான பல்வேறு கருத்துகள் இடம்பெற்றிருந்தன. தனது  உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம்  இசைக்கப்பட வேண்டும் என்று முதலமைச் சருக்கும் பேரவைத் தலைவருக்கும் ஆளுநர்  ஆர்.என்.ரவி பலமுறை கடிதம் எழுதி யிருந்தார். ஆனால், தமிழ்நாடு அரசு,  ஆளுநரின் அறிவுரைகளை புறக்கணித்தது.

தமிழ்நாடு அரசின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றை  பிரதிபலிப்பிற்கு பதில், ஆளுநர் உரையில்  தவறான கருத்துகள் இடம்பெற்றி ருந்தன. இதனால், தமிழ்நாடு அரசு தயாரித்த  உரையை ஆளுநர் படிக்கவில்லை.

பின்னர், பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் உரையை வாசித்தார். அந்த உரை முடியும் வரை ஆளுநர் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தார். உரையை பேர வைத் தலைவர் முடிக்கும்போது, தேசிய கீதத்திற்கு ஆளுநர் எழுந்தார். அப்போது வழக்கமான நடைமுறை பின்பற்றாமல் ஆளு நரை சபாநாயகர் அப்பாவு விமர் சிக்கத் தொடங்கினார். பேரவைத் தலைவரின் செயல்பாடு அவரது பதவியின் கண்ணியத்தையும் அவையின் மாண்பையும் குறைத்து விட்டது.”

இவ்வாறு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.