பாலஸ்தீனம் மீதான தாக்குதலை நிறுத்த கோரிக்கை
இனவெறி இஸ்ரேல் ராணுவம் , பாலஸ்தீன மக்கள் மீது நடத்தும் இன அழிப்பு தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். உணவும் , நிவாரணப் பொருட்கள் காஸா பகுதி மக்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும், மேற்காசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து உருவாக்கும் போர் பதற்றத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (ஜூலை 2) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏ.கோபண்ணா தலைமை தாங்கினார். ஒருமைப்பாட்டு கழக மாநில பொதுச் செயலாளர்கள் ஐ. ஆறுமுக நயினார், மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், மாநில துணைச் செயலாளர் பா.செந்தில் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ், பேராசிரியர் வெங்கடேஷ் த்ரேயா, மருத்துவர்கள் சி.ரெக்ஸ் சற்குணம் , ஏ.ஆர்.சாந்தி உள்ளிட்டோர் பேசினர்.