tamilnadu

கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்ய கோரிக்கை

கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டியை  முழுமையாக ரத்து செய்ய கோரிக்கை

விழுப்புரம், அக். 6 - வரி குறைப்பால் வீடு கட்டுவோருக்கு பெரிய லாபம் ஏதுமில்லை என்பதால் கட்டு மான பொருட்களுக்கான ஜிஎஸ்டியை முழு மையாக ரத்து செய்ய வேண்டும் என்று  கட்டு மான தொழிலாளர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமாரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக் கையில்,“ஒன்றிய பாஜக அரசு சமீபத்தில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சில மாற்றங் களை சிறிதளவு செய்துவிட்டு அதனால் நாட்டு மக்கள் பெரும் பயன் அடைந்துவிட்ட தாக தம்பட்டம் அடிக்கிறது. அதிலும் குறிப் பாக, கட்டுமானத்துறையில் பெருமள விற்கு விலைக் குறைப்பு செய்துள்ள தாகவும், அதனால் நாட்டில் ரியல் எஸ்டேட் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்படும் என்றும் தொடர்ந்து சொல்லி வருகிறது. நாடு முழுவதும் வீடு மற்றும் அபார்ட்மெண்ட் களின் விலை குறையும் என்றும் தொடர்ந்து சொல்வதாக கூறினார். ஆனால், கள நில வரம் வேறாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கட்டுமானப் பொருட்களின் விலையில் சிமெண்ட் விலை மட்டுமே சற்று குறைந்தி ருக்கிறது. ஒரு மூட்டைக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை விலை குறைத்துள்ளனர். ஆனால், மற்ற எல்லா கட்டுமானப் பொருட் களின் விலையிலும் எந்த விலைக் குறைப் பும் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.  குறிப்பாக கட்டுமான கம்பி, செங்கல், ஜல்லி, மணல், எலக்ட்ரிகல் பொருட்கள், பைப்பு உள்ளிட்ட பிளம்பர் சாமான்கள், மரம், பெயிண்ட், சானிட்டரி வேர்கள், டைல்ஸ்,  மார்பிள்ஸ் உள்ளிட்ட எல்லா கட்டுமானப் பொருட்களின் விலைகளும் எந்த வகை யிலும் குறைந்தபாடில்லை என விளக்கி னார். அரசு அறிவித்தாலும் மொத்த வியா பாரிகள் குறைக்கவில்லை என்று சில்லறை வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுவதாக குறிப்பிட்டார். ஒட்டுமொத்தமாக பார்க்கிறபோது ஜிஎஸ்டி வரி குறைப்பினால் கட்டுமானத் துறையில், அந்தத் தொழிலில் எந்த வித மான முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது கட்டுமானத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள வர்களின் குற்றச்சாட்டாக உள்ளது என தெரிவித்தார். ஒன்றிய அரசின் படாடோப மான அறிவிப்புக்கும் உண்மை நிலவரத் துக்கும் சற்றும் சம்பந்தமில்லை என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளதாக கூறினார். அதனால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டுமான பொருட்களுக்கு ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமாரன் கோரிக்கை எழுப்பி யுள்ளார்.