சென்னை, ஜூன் 17- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராதாமணி காலமானதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறி வித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி (70) உடல் நலக்குறை வால் கடந்த 14 ஆம் தேதி மரணமடைந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியை காலியிடமாக சட்டப்பேரவை செய லாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். ஏற்கனவே நாங்குநேரி எம்எல்ஏ எச்.வசந்தகுமார், பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், 234 தொகுதிகள் கொண்ட சட்ட மன்றத்தில் உறுப்பி னர்களின் எண்ணிக்கை 232 ஆக குறைந்துள்ளது. எம்எல்ஏ ராதாமணி மறை வையடுத்து தமிழக சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 100 ஆக குறைந்துள்ளது.