tamilnadu

img

டிச.2 மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் மறியல்.....

சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மறியல்போராட்டம் நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ன்படி தனியார்துறை பணிகளில்  குறைந்தபட்சம் 5 விழுக்காடு இடங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் பின்னடைவு  காலிப் பணியிடங்களை 3 மாத காலத்தில் நிரப்ப வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு செயல் படுத்தியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிரப்ப வேண்டும்.தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போன்று மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும்  ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச-2 புதன் கிழமை தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்திட  தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.சட்டப்பூர்வ இந்த 3 முக்கிய கோரிக்கைளை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. எனவே, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி டிச-2 புதன் கிழமை தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்திட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் தீர்மானித்துள்ளது.இப்போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க  பா. ஜான்சிராணி எஸ். நம்புராஜன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள் ளனர்.

;