tamilnadu

img

காவல் நிலையத்தில் வாலிபர் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு வலியுறுத்தல்

கடலூர், ஜூலை 12- காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் லாக்க பில் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து கட்சி யின் மாவட்டச் செயலாளர்  டி.ஆறுமுகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காட்டுமன்னார்கோயில் அருகே உருத்திரசோலை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி யின் மகன் வினோத் (25)  என்ற வாலிபரை சந்தே கத்தின் பேரில் விசார ணைக்கு காட்டுமன்னார் கோயில் காவல் நிலைத் திற்கு காவல் துறையினர் அழைத்துச் சென்று அன்று  இரவு முழுவதும் சட்டவிரோ தமாக காவல் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர்.  மேலும் வியாழக்கிழமை (ஜூலை 11)  காலை 9 மணிக்கு, தான் கட்டியிருந்த வேட்டியால் வினோத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினர் கூறுவது நம்பும்படி இல்லை. காலை  9 மணியளவில் காவல்  நிலையத்தில் அனைத்து காவலர்களும் இருக்கும் போது எப்படி தற்கொலை செய்துகொள்ள முடியும் என்ற கேள்வி பலவிதமான சந்தேகங்களை எழுப்பு கிறது. இரவு முழுவதும் வினோத்தை அடித்து சித்தரவதை செய்ததால்தான் வினோத் இறந்தார் என்று  குடும்பத்தினர் கூறுகின்றனர்.  மூர்த்தி ஏழ்மையான நிலை மையில் உள்ளவர்.  அவரது மகன் வினோத் ஐடிஐ படித்த இளைஞர்.  அன்றா டம் கூலிவேலை செய்து பிழைக்கும் குடும்பம்.  தன்  மகனை காவல் துறையினர்  அடித்து கொலை செய்துள்ள தாக குடும்பத்தினர் கதறு கின்றனர். நடந்துள்ள சம்ப வத்தில், விசாரணையின் போது காவல் துறையினர்  கடுமையாக தாக்கியதா லேயே வினோத் உயிரி ழந்திருக்க வாய்ப்புகள் அதி கம் உள்ளதாகத் தெரிய வருகிறது. ஆகவே வினோத் லாக்கப் மரணத்தை சிபி சிஐடி விசாரணைக்கு மாற்றி உத்திரவிட வேண்டும் என்  றும், சம்மந்தப்பட்ட காவல் துறை குற்றவாளிகள் மீது  கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வினோத் குடும் பத்திற்கு உரிய நஷ்டஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க மாவட்ட நிர்வாகமும், தமி ழக அரசும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. ஏட்டு பணி நீக்கம் இதற்கிடையே விசார ணைக் கைதி மரணம் தொடர் பாக பணியில் இருந்த ஏட்டு பாவாடைசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஆய்வாளர் ரவீந்தர்ராஜ் விழுப்புரம் டிஐஜி முகாம்  அலுவலகத்திற்கு விசார ணைக்காக அழைக்கப் பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் விசார ணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்த உருத்திரசோலை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (24) உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், மாவட்டச் செயலா ளர் டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்புராயன், அசோகன். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ், வாஞ்சிநாதன், வட்டச் செயலாளர் இளங்கோ, மூத்த உறுப்பினர் மகாலிங்கம், கருணாகநல்லூர் கிளைச் செய லாளர் குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

;