tamilnadu

img

இருளில் தவிக்கும் தலித் மக்கள் ஜெ. வழங்கிய பட்டா நிலத்தின் அவலம்

கிருஷ்ணகிரி, ஜன. 30- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதி நாகோஜன அள்ளியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு  சிறு சிறு வீட்டுக்குள் இரண்டு,மூன்று தலைமுறை குடும்பங்களை சேர்ந்த தலித் மக்கள் ஒன்றாய் வசித்து வந்த னர். தங்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு, மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்து வந்தனர்.   இதனைத்தொடர்ந்து, 2002ல் ஆதிதிராவிட நலத்துறையால் நிலம் கையகப்படுத்தப்பட்டு 2003-ல்  தருமபுரி விழாவில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா 32 பேருக்கு  இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார்.  2004 ஆம் ஆண்டுக்குப்  பின் அந்த இடத்தை அரசு அதிகாரிகள் அளந்து கொடுக்காததால்  32 பயனாளிகளுக்கு ஆதரவாய் தீர்ப்பு வந்தது.  அதன் அடிப்படையில் 2019 ஆம்  ஆண்டில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர்  தலையீட்டில் 3 சென்ட் வீதம் 32 பய னாளிகளுக்கு இடத்தை அளந்து கொடுத்தனர். அன்று முதல் பயனாளி கள் குடிசை வீடுகள் கட்டிக் கொண்டு  ஆடு, மாடுகள் வளர்த்துக் கொண்டு  வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத் திற்கான வீட்டு வரி ரசீது பேரூராட்சி நிர்வாகம் கொடுத்துள்ளது. இங்கு  வசிக்கும் மக்களுக்கு மின் இணைப்பு, குடிநீர், தெரு விளக்கு,  கழிப்பிடம், கழிவு நீர் கால்வாய் வசதி கள் கேட்டு வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களில் தொடர்ச்சி யாக மனுக்கள் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. 

இருட்டில் வசிப்பதால் குழந்தை கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்  ளது. இயற்கை உபாதைகளுக்கு பெண்களும் சிறுமிகளும், மாணவி களும் கூட நீண்ட தூரம் சாலை ஓரம்  செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே, அளந்து கொடுத்ததற்கு மாறாக அளவை குறைத்து மறு அளவீடு செய்ய அதிகாரிகள் முயற்சிப்பதால் அடிப்படை வசதிகள்  செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்த னர். இதனால், பாதிக்கப்பட்ட பய னாளிகள் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச்  செயலாளா எஸ்.ஆர். ஜெயராமன்,  விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் பிரகாஷ், மற்றும் வாலிபர் சங்க , மாதர் சங்க நிர்வாகிகளுடன்  இரு முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித் துள்ளனர். இதற்கிடையில், மலைவாழ் மக்கள் சங்க அகில இந்திய துணைத் தலைவரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லி பாபு நாகோஜன அள்ளி வெங்கட்ராமன் நகர் 32 பயனாளிகளையும், வசிப் பிடங்களையும் ஆய்வு செய்தார். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனுகொடுத்தார். மறு அளவீடு குழப்பத்தால் ஆடு, மாடுகள் வளர்க்கவும், வீட்டருகில் மரம், செடிகள் வைக்கவும், கழிவு நீர்  கால்வாய்கள் அமைக்கவும் கழிப்பறைகள் கட்டவும் இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னாள் முதல்வர் ஜெய லலிதா 2002ல் கொடுத்த பட்டாபடி 32 பயனாளிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தா மல் மின் இணைப்பு, தெருவிளக்கு, கழிவு நீர் கால்வாய், குடிநீர், கழிப்பிடம், தெரு வசதிகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பய னாளிகள், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், போச்சம்பள்ளி வட்ட நிர்வாகிகள் சின்னச்சாமி, சின்னராஜ், மாத லிங்கம்,கந்தன், புதனன்று (ஜன.29) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மாவட்ட ஆட்சியர் மனுவை பெற்றுக் கொண்டு நடவ டிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

;