tamilnadu

img

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு!

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.134க்கு குறைக்கப்பட்டுள்ளது.  

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.  

கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ.2,508க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.  

இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு ரூ.134 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2,373க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.1018.50ஆக விற்பனை செய்யப்படுகிறது.