tamilnadu

img

தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடிக்கு தனி வாரியம் உருவாக்கம்!

முந்திரி சாகுபடிக்குத் தனி வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரிக்கத் தமிழ்நாடு முந்திரி வாரியம் என்னும் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2025-26ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில்  முந்திரியின் பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரிசார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும்  ரு.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.