tamilnadu

மாணவர்களை அச்சுறுத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் சிபிஎம் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் குற்றச்சாட்டு

மாணவர்களை அச்சுறுத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டம்  

சிபிஎம் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் குற்றச்சாட்டு

புதுச்சேரி, ஆக.20 புதுச்சேரி அரசுப் பள்ளி மாண வர்களை அச்சுறுத்தும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் திணிக்கப் பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.  இதுகுறித்து மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் பாஜக-என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசு மாநில உரிமையை விட்டுக் கொடுத்து, ஒன்றிய கல்வி வாரிய பாடத்திட்டத்தை அரசுப் பள்ளிகளில் முழுமையாக நடைமுறைப்படுத்தி உள்ளது. இது புதுச்சேரியின் தனித்துவ மான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அழிக்கும் செயல் என்று மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக ஆட்சேபித்து உள்ளது. மக்கள் கருத்தறியாமல், எதேச்சாதிகார மனப்பான்மையுடன் சிபிஎஸ்இ கல்வி முறை திணிப்பால் 2023-24 கல்வியாண்டில் 10,054 மாண வர்கள் பள்ளிக் கல்வியில் இருந்து விலகியுள்ளனர். இந்த இடைநிற்றல் பெரும் அதிர்ச்சி அளிப்பதுடன், மாநிலத்தின் முன்னேற்றத்தை கடுமையாக பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெற்றுள்ள னர். இதன் விளைவாக அரசுப் பள்ளி மாணவர்கள் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இடம் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. உயர் கல்வி வாய்ப்பு பெறுவதற்காக பல அரசுப் பள்ளி மாணவர்கள் தனி யார் பள்ளிகளில் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் சேர்ந்து வருகின்றனர். புதுச்சேரி அரசிடம் தற்போது உள்ள சிபிஎஸ்இ பாடமுறையை உடனடியாக கைவிட்டு, புதுச்சேரி சமூக வரலாற்றுப் பகமைகளையும் இணைத்து சமச்சீர் கல்வி முறையை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.