சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு எதிராக முற்றுகைப் போராட்டம்
சிபிஎம் புதுச்சேரி மாநிலக்குழு அறிவிப்பு
புதுச்சேரி, ஆக.23 - சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை கைவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செப்டம்பர் 2 அன்று புதுச்சேரி கல்வித் துறை முன்பு முற்றுகைப் போராட்டம் நடை பெறுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் அவசர மாக அமல்படுத்தப்பட்ட சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இது அவர்களின் எதிர்காலப் போட்டித் தேர்வுகளைப் பாதிக்கும். இதன் விளைவாக, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறி தனியார் பள்ளிகளை நாடி சென்றுள்ளனர். பிரச்சாரம் மாணவர்களின் எதிர்கால கல்வி நலன் கருதி சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை கைவிட கோரி ஆகஸ்ட் 29 ஆம் தேதி புதுச்சேரி முழுவதும் பிரச்சார இயக்கத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாண வர் அமைப்புகள் மற்றும் வெகுஜன அமைப்பு களுடன் இணைந்து செப்டம்பர் 2ஆம் தேதி புதுச்சேரி கல்வித்துறை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கலைப் பயணம் மேலும். ப்ரீபெய்டு மின் மீட்டர்களின் அபாயகரமான விளைவுகளை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சப்தர் ஹஷ்மி கலைக்குழுவினரின் இணைந்து புதுச்சேரி முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார். கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் என். கொளஞ்சியப்பன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன் கலந்துகொண்டு இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.