சிபிஎம் உறுப்பினர் விபத்தில் அகால மரணம்
சென்னை, செப். 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிக நகர் 74ஆவது வட்டம் மங்களபுரம் கிளை உறுப்பினர் ராஜேஷ் செவ்வாயன்று (செப். 23) பணியில் இருந்த போது, விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 43. இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடசென்னை திரு.வி.க. நகர் பகுதி குழு உறுப்பினராக செயல்பட்டவர். 2015இல் ஏற்பட்ட சென்னை பெருவெள்ளம், கொரோனா தொற்று போன்ற காலங்களில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். நடந்து முடிந்த கட்சியின் மாநில மாநாடு, அகில இந்திய மாநாட்டில் செந்தொண்டாரக பங்கேற்றார். இவர் ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள திரையரங்கில் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஹைட்ராலிக் சிசர் லிப்டில் சென்று புரொஜெக்டரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது லிப்ட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக, லிப்ட் தானாகவே மேல் நோக்கிச் சென்று மேற்கூரையில் மோதியுள்ளது. இதில் தலை யில் பலத்த காயமடைந்து ராஜேஷ் உயிரிழந்தார். சென்னை யில் மிகப்பெரிய மாலில் ஊழியர்களுக்கு போதுமான உயிர் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விபத்து குறித்து அண்ணா சாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.அவரது உடல் புதனன்று ஓட்டேரி மயனத்தில் இறுதி நிகழ்ச்சி நடை பெறுகிறது.