tamilnadu

சிபிஎம் தலைவர்கள் வாக்களிக்கும் இடங்கள்!

தமிழகத்தில் 18-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வெள்  ளிக்கிழமையன்று ஒரே கட்டமாக நடை பெறுகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வாக்களிக்கவுள்ள வாக்குச் சாவடி களின் விவரம் வருமாறு:

மாநிலச்செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் - சிதம்பரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன்  சிதம்பரத்தில் உள்ள நகராட்சி நடு நிலைப்பள்ளி, மேற்கு பார்த்த கட்டடத் தில் காலை 7.30 மணியளவில் தனது வாக்கைப் பதிவு செய்கிறார்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் - ஆதம்பாக்கம்
கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மோகன புரி, ஆதம்பாக்கம், சென்னை-88-இல்  உள்ள புனித மார்க்ஸ் உயர் நிலைப்பள்ளி யில் காலை 8.00 மணியளவில் தனது வாக்கைப் பதிவு செய்கிறார்.

மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் - தியாகராயர் நகர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருமான டி.கே. ரங்க ராஜன், காலை 08.30 மணியளவில் சென்னை, தி.நகர், எண். 54 பர்கிட் சாலை யில் (தண்டபாணி தெரு சந்திப்பு) உள்ள  ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்கிறார்.

மத்தியக்குழு உறுப்பினர்  உ.வாசுகி - நீலாங்கரை
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி காலை 07.00 மணியளவில் நீலாங்கரை, சன்பீம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் (வடக்கு முகம்), தனது வாக்கைப் பதிவு செய்கிறார்.

மத்தியக்குழு உறுப்பினர்  ஏ.கே.பத்மநாபன் - கொளத்தூர்
மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே. பத்ம நாபன் பிளாட் எண். 3, சாமுதாரியா காலனி, 4-ஆவது தெருவில் உள்ள மேரியோ நர்சரி துவக்கப்பள்ளியில் காலை 9.30 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்கிறார்.

மத்தியக்குழு உறுப்பினர்  பெ.சண்முகம் - ஆவடி
மத்தியக்குழு உறுப்பினர் பெ.  சண்முகம் ஆவடி நகராட்சி தொடக்கப் பள்ளியில் (கிழக்கு முகப்பு) காலை 8.00  மணியளவில் தனது வாக்கைப் பதிவு செய்கிறார்.