கடலூர் தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்
கடலூர், செப்.6- கடலூர் சிப்காட் தொழிற்சாலை வளா கத்தில் செயல்பட்டு வந்த கிரிம்சன் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை(செப்.5) ஏற்பட்ட விபத்தால் வெளியேறிய ரசாயன வாய்வு சுவாசித்ததனால் அருகாமை குடிகாடு கிராம மக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் உட்பட 100 க்கு மேற்பட்டவர்கள் வாந்தி மயக்கம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளானார்கள். உடனடியாக கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வருவோரை சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்டசெயற்குழு உறுப்பி னர்கள் பி.கருப்பையன், ஜெ.ராஜேஷ் கண்ணன், மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் மருத்துவ மனைக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை பாதுகாப்பு துறைகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த தொழிற்சாலை யில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு விபத்து ஏற்பட்டு அதில் 4 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் பாதிப்படைந்த நிலையில் மீண்டும் இதே தொழிற்சாலையில் இது போன்ற சம்ப வங்கள் நடப்பது தொடர்கதையாக உள்ளது. இங்கு பணி செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கும் அருகாமையில் வசிக்கக்கூடிய மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய அதிகாரிகளின் செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளதால் இரண்டு அல்லது மூன்று அடுக்கு பாது காப்பு முறை இந்த தொழிற்சாலை வளா கத்தில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பான நிலை மக்கள் அச்ச மின்றி வாழக்கூடிய சூழலை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகத்தையும் சம்பந்தப்பட்ட துறைகளையும் வலியுறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவார ணம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த சிப்காட் சுற்றுச்சூழல் மதிப்பீடு தாக்க அறிக்கையை தயார் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.