மனைப்பட்டா கோரி விருத்தாசலத்தில் சிபிஎம் காத்திருப்பு போராட்டம்
கடலூர், செப்.9 - விருத்தாசலம் வட்டத்தில், பல்வேறு கிரா மங்களில் குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி சிபிஎம் சார்பில் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு செவ்வாய்க்கிழமை (செப்.9)காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே, வழங்கப்பட்ட மனைப்பட்டா விற்கான இடத்தை அளவீடு செய்யக் கோரியும், விண்ணப்பித்த அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தியும் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஆர். கலைச்செல்வன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை தொடர்ந்து விருத்தா சலம் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், ஒன்றியச் செயலாளர் ஆர். கலைச்செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஜெயராமன், விருத்தாசலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.குமாகுரு, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் ஆர்.இளங்கோவன், அன்புச் செல்வி, யூ.சுந்தரவடிவேலு, ஆர்.கோவிந்தன், எஸ்.கனகராஜ், பி.செந்தில், டி.பரம சிவம், கே.செல்வகுமார், எஸ்.சாமிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பெருந்துறை ஓட்டி மேடு, கோ.ஆதனூர், சேப்பளாநத்தம் (வடக்கு), உய்யகொண்ட ராவி, ஊ.மங்கலம், இருளக்குறிச்சி, கோ. பொன்னேரி ஆகிய கிராமங்களில் மனை பட்டா வழங்குவது குறித்து 15 நாட்களில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே வழங்கிய மனை பட்டா இடத்தை அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததன் அடிப்படையில் காத்திருப்பு போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.