வடசென்னை அனல்மின் நிலைய விபத்து தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க சிபிஎம் வலியுறுத்தல்
திருவள்ளூர், அக். 2- வடசென்னை அனல்மின் நிலை யத்தில் ராட்சச வளைவு சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 9 வெளிமாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன் னேரி வட்டத்திற்கு உட்பட்ட வாய லூர் அருகே வடசென்னை அனல் மின் நிலைய திட்ட அலகு நான்கின் திட்ட பணிகள் நடைபெற்று வரு கிறது. செ. 30 அன்று நிலக்கரி சேமிக்கும் கிடங்கிற்கு மேற்கூரை அமைக்கும் பணியில் அசாம் மாநி லத்தை சார்ந்த 10 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்தரத்தில் ராட்சத அளவிலான வளைவு அமைக்கும் பணியின்போது மிக நீள மான இரும்பு ராடுகளை கொண்ட சாரம் 135 அடி உயரத்திலிருந்து சரிந்தது. அப்போது, அந்தப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர் களும் ராடோடு சரிந்து சம்பவ இடத்திலேயே 5 பேர், மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது 4 பேர் என 9 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி யையும், வருத்தத்தையும் ஏற்படுத் தியுள்ளது. இந்த தகவல் அறிந்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் கே.விஜயன், மாவட்டத் துணைத் தலைவர் ஜி.விநாயக மூர்த்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் சலில் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், இதுகுறித்து எஸ்.கோபால் செய்தியாளர்களிடம் கூறு கையில், “மேற்கூரை அமைக்கும் பணியின் போது, தொழிலாளர் களுக்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் கவனக்குறைவு இருந்தது தெரி கிறது”என்றார். இரண்டு பக்கம் தூண்கள் அமைத்து இரண்டு பக்கங்களை யும் இணைக்கும் மேற்கூரை அமைக்கும் பணியை இரண்டு கிரேன்கள் உதவியுடன் மட்டுமே செய்துள்ளனர். மேலே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சாரமோ, கீழே வலை பின்னலோ அமைக்கவில்லை. இரும்பு ராடு களை இணைப்பில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பணியை மேற்கொண்ட நிறுவனமோ, பணி யிட மேற்பார்வை அதிகாரிகளோ செய்யவில்லை என்பது தெரிய வரு கிறது என்றும் அவர் தெரிவித்தார். தலைவர் ஆய்வு தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் விபத்து நடந்த இடத்தை பார்வை யிட்டு அதிகாரிகளிடம் விவரங் களை கேட்டறிந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தெரி வித்தார். பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைபாடு இருந்தது குறித்தும், உயிரிழந்த தொழிலா ளர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கு வது குறித்தும் தெரிவித்துள்ளனர். மேலும் வெளி மாநிலத்திலி ருந்து அங்கு தங்கி பணியாற்றும் தொழிலாளர்களை முறையாக பதிவு செய்வது, அவர்கள் தங்கு மிடம், அவர்களுக்கான சுகாதாரம், குறைந்தபட்ச ஊதியம் போன்ற பிரச்சினைகள் குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள் ளனர். இதுகுறித்து உரிய தலையீடு செய்வதாக தெரிவித்தார். நிவாரணம் விபத்து நடந்த செய்தி அறிந்தவு டன், தமிழக அரசு ஒவ்வொரு தொழி லாளிக்கும் ரூ.10 லட்சமும், ஒன்றிய அரசு ரூ.2 லட்சமும் நிவாரண நிதி அறிவித்துள்ளது. இது போதுமான தல்ல என்று கூறிய எஸ்.கோபால், உயிரிழந்த தொழிலாளர் களுக்கு வேலையாள் இழப்பீடு சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் எந்த பாதுகாப்பு ஏற்பாடும் இன்றி ராட்சத வளைவு அமைக்கும் பணியில் ஈடுபட்ட மெட்கர்மா நிறுவனத்தை உடனடி யாக அந்த திட்டப் பணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறிய அவர், பாதுகாப்பு ஏற்பாடு களை கவனிக்கத் தவறிய இணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
